சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24ஆம் தேதி, இளம் பெண் பெறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ள பதிவுகள், அவரது மரணத்தோடு சம்பந்தப்பட்டது போல் இருப்பதால் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.
சுவாதி கடந்த பிப்ரவரி மாதம் இப்படி ஒரு பதிவை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அதில் தன்னுடைய மரணத்திற்கு பின், தனக்கு நிறைய வேலை இருக்கிறது என்று கூறுவது போல் இருக்கிறது. மறு ஜென்மத்தில் வந்து பழிவாங்குவேன் என்பதைத்தான் அப்படி கூறியிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.
அவர் எதற்காக அப்படி ஒரு பதிவை செய்தார் என்று தெரியவில்லை. அந்த பதிவை அவர் பகிர்ந்த 4 மாதங்களுக்குள் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சுவாதி, கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஒருவாரகாலமாகவே அவர் தனது பேஸ்புக்கில் எந்த பதிவும் இடவில்லை. கடைசியாக ஜூன் 15 ஆம் தேதி தனது கடைசி பதிவை இட்டுள்ளார். அதில் “ தவறு செய்துவிட்டோம் என்பதற்காக அதையே நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் ஏன் அந்த பதிவை இட்டுள்ளார் என்பதும் தெரியவில்லை. அதன் பின் அவர் எந்த பதிவும் இல்லை.
எனவே, அவரின் பதிவுகளுக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?, அவர் எதாவது பிரச்சனைகளில் சிக்கி இருந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் குழு, சுவாதியுடைய பழைய பதிவுகளை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரிகிறது.
அதிலும், முக்கியமாக, பிப்ரவரி மாதம், அவர் பதிவுட்டுள்ள “மறு ஜென்மத்தில் நான் பிசியாக இருப்பேன். நான் பழிவாங்க நினைக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது” என்ற பதிவு, போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவருகு எதிரிகள் இருந்தனரா, அவர்களால் அவருக்கு பிரச்சனைகள் இருந்துள்ளதா? இது முன்கூட்டியே சுவாதிக்கு தெரிந்திருந்ததா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை முடிக்கியிருப்பதாக தெரிகிறது.