மங்களூரின் திருமணமாகி 6 மாதங்களே ஆன பெண்ணின் உடை மாற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை எடுத்தது அவரின் மாமனார்தான் என்பது அதில் மேலும் அதிர்ச்சிக்குறிய செய்தியாகும்.
அந்த பெண்ணின் கணவர் பிரகாஷுக்கு அவரது நண்பர்கள் மூலம் தனது மனைவியின் உடை மாற்றும் வீடியோ இணையத்தில் வந்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் தனது மனைவியிடம் அதனை போட்டுக்காட்ட கதறி அழுதுள்ளார் அவர்.
அந்த வீடியோ தங்கள் வீட்டின் அறையில் எடுக்கப்பட்ட வீடியோ என தெரிகிறது. உடனடியாக காவல்துறையில் இது குறித்து புகார் அளிக்க. காவல்துறையின் விசாரணையில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான அவரது மாமனார் மாட்டிக்கொண்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர்தான் பேனாவில் கேமராவை மறைத்து வைத்து வீடியோ எடுத்தது தெரியவந்தது. தனது மருமகள் அடிக்கடி போன் பேசுவதால், அவர் எனது மகனுக்கு துரோகம், செய்கிறாளோ என்ற சந்தேகத்தில்தான் கேமர வைத்ததாகவும், ஆனால் அதனை தான் இணையதளத்தில் விடவில்லை என்றும், அது இணையத்தில் எப்படி வந்தது என்று தெரியவில்லை என கதறி அழுதார்.
மாமனார் கேமராவை மறைத்து வைத்த பேனாவை வீட்டு வேலைக்கார பெண் திருடி விற்றது தெரியவந்தது. இதன் பின்னர் அந்த பெண் காவல்துறையிடம் அளித்த புகாரை திரும்ப பெற்றார். அந்த வீடியோவும், இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது.