அரசியலில் தற்போது மவுன விரதம் கடைப்பிடித்து வருவதாகவும் ஆனால் அதே நேரத்தில் என்னை அரசியலுக்கு அழைத்தால் எப்போதும் பணி செய்ய தயாராக இருக்கிறேன் என்றும் எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார்
தற்போது அவர் பாஜகவில் இருந்தாலும் பாஜக அவரை சரியாக பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
அரசியலுக்கு என்னை பாஜக காட்சி அளித்தால் அவர்களுக்கு தான் லாபம் என்றும் அழைக்காவிட்டால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
மேலும் அரசியலில் ஒரு கருத்து சொல்லும் போது அதனால் பிரச்சினைகள் ஏற்பட்டால் அந்த கட்சிதான் அவரை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் மோடி தான் வெற்றி பெறுவார் என்றும் பாஜக நாடு முழுவதும் 400 இடங்களில் வெற்றி பெறும் என்றும் அவர் கணிப்பு கூறினார்