Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொம்பு தூக்க ஒரு அளவில்லையா... எஸ்.வி சேகரின் இந்த டிவிட் யாருக்கு??

Advertiesment
எஸ்.வி சேகர்
, சனி, 25 ஜனவரி 2020 (15:35 IST)
பாஜக ஆதரவாளரான எஸ்.வி சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் சொம்பு தூக்க ஒரு அளவில்லையா? என ஒரு டிவிட்டை பதிவிட்டுள்ளார். 
 
ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிட விடுதலை கழகத்தினர் கூறி வந்த நிலையில், தான் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் தெரிவித்தார். 
 
இதனைத்தொடர்ந்து இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ரஜினி தனது மகளுக்கு 2வது திருமணம் நடத்துகிறார் என்றால், அதற்கு பெரியாரின் கொள்கைகள் தான் காரணம் என பேசினார். இவர் மட்டுமின்றின் ரஜினியை எதிர்த்த பெரும்பாலாரோனின் இந்த கருத்தை முன்வைத்தனர். 
 
இந்நிலையில், டிவிட்டரில் பாஜக ஆதரவாளர் ஒருவர் ராமசாமி நாயக்கரால் தான் இரண்டாவது திருமணம் நடக்கிறதா? அப்படி என்றால் அந்த திருமணங்களில் மந்திரம் சொல்லி, அக்னி சாட்சியாக நடப்பது சோ. ராமசாமி அவர்களால் என்று நான் சொல்கிறேன் என பதிவிட்டிருந்தார். 
 
இதனை குறிப்பிட்டு எஸ்.வி சேகர், பல முதல் கல்யாண முறிவுக்கே அவர்தான் காரணும்னு உளரியிருக்கலாமே. சொம்பு தூக்க ஒரு அளவில்லையா? அடுத்தவங்க தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது கூட அநாகரிகம் என்று தெரியாத முட்டாள் நாத்திகம் என பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துருக்கியில் நிலநடுக்கம்; வீடுகள் தரைமட்டம்; 18 பேர் பலி