Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2017 -ல் நடைபெற்ற குரூப் 2 A தேர்விலும் முறைகேடு !

Advertiesment
2017 -ல் நடைபெற்ற குரூப் 2 A  தேர்விலும்  முறைகேடு !
, வெள்ளி, 24 ஜனவரி 2020 (20:57 IST)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்த 99 பேர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்நிலையில்,  கடந்த 2017 ஆம் ஆண்டு குரூப் 2Aதேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 40 பேர் தரப்பட்டியலில் வந்ததால் இதுகுறித்து விசாரணை செய்ய சிபிசிஐடி களமிறங்கியது. இந்த விசாரணையில் தேர்வு எழுதிய சிலர் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் துணையுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிய வந்தது
 
இந்த முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள், இடைத்தரகர்கள் ஆலோசனையின் பேரில் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களை தேர்வு செய்துள்ளனர் என்பது தெரிய வந்ததால் இதுகுறித்து விசாரணை செய்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளான தேர்வர்கள் 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாகவும், இந்த 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த முறைகேட்டில் ஈடுபட்டு தரவரிசைப்பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் 39 தேர்வர்கள் வந்துள்ளதாவும், இவர்களுக்கு பதில் வேறு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
 
இந்நிலையில்  கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2A தேர்விலும் முறைகேடு நடந்தது தெரிய வந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 50 இடங்களுக்குள் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரணை தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததால் குடிதண்ணீர் நிறுத்தமா? எம்பியின் டுவிட்டால் பரபரப்பு