பெண்கள் சிறைச்சாலையின் மேல் ட்ரோன் பறந்ததை அடுத்து, கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Mahendran
புதன், 5 மார்ச் 2025 (10:00 IST)
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் பெண்களுக்கான சிறைச்சாலை உள்ளது. அந்த சிறைச்சாலை மீது நேற்று இரவு நேரத்தில், ஒரு ட்ரோன் இரண்டு முறை சுற்றி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
முதலில், இந்த ட்ரோன் பறந்ததை  சிறை ஊழியர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். ஆனால், அந்த ட்ரோன் மீண்டும் மீண்டும் அதே இடத்தில் பறந்து, சிவப்பு மற்றும் பச்சை விளக்குகளை ஒளிரச் செய்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, சிறை ஊழியர்கள் காவல்துறைக்கு புகார் அளித்தனர்.
 
தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். பொதுவாக, திருமணம் அல்லது ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகள் நடந்தால், ட்ரோன் மூலம் வீடியோ எடுத்தல் வழக்கம். ஆனால், அந்த சிறைச்சாலை அருகே எந்த திருமணமும் நடைபெறவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது.
 
இதனால், அந்த ட்ரோன் ஏன் பறந்தது? அதை இயக்கியவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

திடீரென தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளியும் திடீரென ரூ.13000 குறைந்ததால் பரபரப்பு..!

ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. கனமழை எச்சரிக்கை..!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை: டிரம்ப்

ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்து கொண்ட அரசு ஊழியர் சஸ்பெண்ட்.. அரசின் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments