Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மீடூ'வால் அப்பாவி ஆண்கள் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது: சுசி கணேசன்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (19:56 IST)
வைரமுத்து-சின்மயி விவகாரம் தற்போது தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதே 'மீ டூ'வில் மேலும் சில பெண்கள் தங்களுக்கும் பாலியல் தொல்லைகள் ஏற்பட்டதாக கூறி வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் கவிஞர் லீலா மணிமேகலை

கவிஞர் லீலா மணிமேகலை தனது டுவிட்டர் பக்கத்தில் திருட்டுப்பயலே இயக்குனர் சுசிகணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியதோடு, சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறிய இயக்குனர் சுசி கணேசன், 'லீனா மணிமேகலை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம், மேலும் மான நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன் மீ டூ இயக்கத்தில், அப்பாவி ஆண்கள் தன் பக்க நியாயத்திற்கு போராடவேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்று கூறியுளார்.

மேலும் லீனா மணிமேகலை விளம்பரத்திற்காக என் மீது தவறான புகார் அளித்துள்ளார். அவரது புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை' என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்