Publish Date: Thu, 02 Nov 2023 (16:16 IST)
Updated Date: Thu, 02 Nov 2023 (16:18 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவா அதிமுகவில் சேர இருப்பதாக தகவல் வெளியான நிலையில் திடீரென அவரை அண்ணாமலை பாஜகவில் மீண்டும் சேர்த்துக் கொண்டதாக வெளிவந்திருக்கும் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக பாஜக வெளியிட்டுள்ள அறிவிப்பில் சூர்யா சிவா அவர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடிப்படையில் 24. 11. 2002 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க சூர்யா சிவா அவர்கள் தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா சிவா அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் திடீரென அவர் மீதான நடவடிக்கை ரத்து செய்து அண்ணாமலை பாஜகவில் அவரை சேர்த்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.