சனாதனம் குறித்து சர்ச்சை பேச்சு: தமிழக அரசு, உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (14:32 IST)
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
சனாதன சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சனாதாரம் குறித்து அமைச்சர் ஒருவரே பேசியது விரும்பத்தகாதது என்று உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு அமைச்சர் உதயநிதி மற்றும் தமிழக அரசு என்ன பதில் அளிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரேசில் புகைப்பட கலைஞரின் இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டால் ஏற்பட்ட சிக்கல்!

பொது இடத்தில் சிறுநீர் கழித்த வீடியோ வைரல்.. அவமானத்தில் தற்கொலை செய்த இளைஞர்..

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன்.. டிரம்ப் அறிவிப்பு.. அப்ப மோடி கலந்து கொள்வாரா?

தேர்தலில் தோல்வி அடைந்தால் பதவிகள் பறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

தமிழகத்தில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்!.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments