Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோடநாடு கொலை வழக்கில் பழனிசாமிக்கு எதிராக கருத்து கூற கூடாது: உதயநிதிக்கு இடைக்கால தடை

Advertiesment
கோடநாடு கொலை வழக்கில் பழனிசாமிக்கு எதிராக கருத்து கூற  கூடாது: உதயநிதிக்கு இடைக்கால தடை
, வியாழன், 21 செப்டம்பர் 2023 (17:15 IST)
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அமைச்சர் உதயநிதி கருத்து கூறக்கூடாது என நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.  
 
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் என்னைப் பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஒரு கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடு தரவும் உத்தரவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சமீபத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
 இந்த மனு என்று விசாரணைக்கு வந்த நிலையில் இருதரப்பு வாதங்களும் நடைபெற்றது. அதன் பிறகு அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் அறிக்கைகள் விடுவது வழக்கம்தான் ஆனாலும் இந்த வழக்கில் உள்ள ஆதாரங்களில் இருந்து உதயநிதி அறிக்கை  அவதூறாக உள்ளது 
 
இதை அனுமதித்தால் மனுதாரருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படும், எனவே இதுபோல் அறிக்கை இனிமேல் வெளியிடக்கூடாது என்று உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளது என்று கூறினார்.  மேலும் இந்த மனுவுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

I.N.D.I.A கூட்டணியில் இணைகிறதா கமல் கட்சி? நாளை முக்கிய முடிவு..!