தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளன. 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை போலீசார் அமல் படுத்தவில்லை என ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
	 
 
									
										
			        							
								
																	
	இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஆர்எஸ்எஸ் பேரணியை சுற்றுச்சுவருக்குள் நடத்த அனுமதி அளித்து  உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள் திறந்த வெளியில் பேரணி நடத்த அனுமதி அளித்ததோடு போலீசார் தகுந்த பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதி வந்த உறுதி செய்துள்ளது. மேலும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது