Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த 34 நாட்கள்.... என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Advertiesment
lal salaam
, திங்கள், 10 ஏப்ரல் 2023 (18:55 IST)
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான படம் 3. இப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமன அவர், மீண்டும், 2015 ஆம் ஆண்டு கெளதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார்.

அதன்பின்னர், ஒரு ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்ட்டிருந்தார். அதேபோல், ஓ சாத்தி சால் என்ற இந்திப் படத்தை இயக்குவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதற்கான வேலைகள் நட்ந்து வரும் நிலையில்,  சமீபத்தில், லைகா நிறுவனம் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்க, விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதா நாயர்களாக நடித்து வரும் லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் அரசியல் பற்றி பேசுவதாகக் கூறப்படும் நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மார்ச் 7 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இதுகுறித்து தன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்த 34  நாட்கள் படப்பிடிப்பும் என் வாழ்வில் மறக்க முடியாத   ஒன்று கூறியுள்ளார்.

விரைவில் லால்சலாம் படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்லீவ்லெஸ் சேலையில் சில்க் மாதிரி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஜூலி - லேட்டஸ்ட் போட்டோஸ்!