செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவின் விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கைது செய்ய அதிகாரம் இல்லை என்றும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் வாதாடப்பட்டது
இந்த வழக்கு கொடுத்த கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அமலாக்கத்துறை காவல் எதிர்த்து தான் மனு செய்திருக்க வேண்டும் என்றும் மாறாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கக் கூடாது என்றும் கருத்து கூறினர்
இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. நாளை பிற்பகல் 2 மணிக்கு இந்த வழக்கின் வாதங்கள் நிறைவு பெற்றவுடன் நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது