Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது எப்போது? சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை..!

Advertiesment
செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது எப்போது? சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை..!
, செவ்வாய், 25 ஜூலை 2023 (07:53 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது எப்போது? என்பது குறித்த விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
 
இன்றைய விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அமைச்சர் செந்தில் பாலாஜியை எந்த தேதியில் இருந்து அமலாக்கத்துறை காவலில் எடுக்கலாம் என இரு நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும் என 3வது நீதிபதி கூறியிருந்த நிலையில் காவலில் எடுக்கும் தேதி இன்று முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சைக்கு பின் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் காதலரை கரம் பிடிக்கச் சென்ற இந்திய பெண்ணுக்கு கிடைத்த அமோக வரவேற்பு