தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் அதை தமிழக அரசுக்கு அளிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஆக்ஸிஜன் தடுப்பாட்டால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்ஸிஜன் மத்திய அரசிடம் வழங்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசின் மூலமாக மாநில அரசுகளுக்கு அவை பிரித்து தரப்படும் என்றும், முன்னதாக ஆக்ஸிஜன் ஒதுக்குவதை மத்திய அரசு மேற்கொள்ள உத்தரவு ஒன்று உள்ளதையும் சுட்டி காட்டி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் இது தொடர்பான உத்தரவில் உச்சநீதிமன்றம் ஜூலை 31 வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி அளித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை தமிழகத்திற்கு வழங்கவும் கூறப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.