Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Mahendran

, செவ்வாய், 7 மே 2024 (10:30 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஒரு பக்கம் கோடை வெயில் குறைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மே நான்காம் தேதி அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்ததில் இருந்தே தமிழகம் முழுவதும் கடுமையாக  கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் அவ்வப்போது கோடை மழை தமிழகத்தின் சில பகுதிகளில் பெய்து வரும் நிலையில் இன்று 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி தமிழகத்தில் என்று ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மற்றும் விருதுநகர் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூங்காக்களில் நாய்கள் கொண்டு வர கட்டுப்பாடு.. சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு..!