தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பம் பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தும்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அதிக வெப்பம் பதிவாகி வருகிறது என்பதும் நேற்று கூட 15 மாவட்டங்களில் உச்சகட்ட வெப்பம் பதிவானதாக செய்திகள் வெளியானது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு அடுத்த ஐந்து நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி மே இரண்டாம் தேதி முதல் நான்காம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் அதிகபட்ச வெப்பம் பதிவாகால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.