சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சுதாகரன் இன்று பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா இளவரசி சுதாகரன் ஆகிய மூவருக்கும் நான்காண்டு சிறை தண்டனை மற்றும் 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. ரூபாய் 10 கோடி அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் 10 கோடி அபராதம் செலுத்திவிட்டு நான்கு ஆண்டுகளில் விடுதலையாகினர். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் ரூபாய் 10 கோடி அபராதத் தொகை செலுத்தாததால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்ற சுதாகரன் இன்று வெளியானார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் அவரை வரவேற்று மலர்தூவி அழைத்துச் சென்றனர்.