Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.விற்கு கால்கள் இருந்ததா? - விசாரணை கமிஷனில் மருத்துவர் விளக்கம்

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (14:07 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் எம்பார்மிங் செய்யப்பட்ட போது அவருக்கு கால்கள் இருந்தனவா என மருத்துவர் சுதா சேஷயன் விசாரணை கமிஷனிடம் விளக்கம் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

 
ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரிக்க, ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.  
 
அதைத் தொடர்ந்து, ஜெ.விற்கு நெருக்கமானவர்கள், சசிகலாவின் உறவினர்கள் பலரிடம் விசாரணை நடைபெற்று வந்தது. ஜெ.வின் சிகிச்சை குறித்த வீடியோ வெளியானதால் கிருஷ்ணபிரியாவிற்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. 
 
அதேபோல், தினகரன், சசிகலாவிற்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்நிலையில், ஜெ.வின் சிகிச்சை தொடர்பான 4 வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை தினகரனின் வழக்கறிஞர் ஆறுமுகச்சாமியிடம் வழங்கினார். 
 
இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் ஜெ. மரணம் அடைந்த பின் ஜெ.வின் உடலை எம்பாமிங் செய்த சென்னை மருத்துவ கல்லூரி உடற்கூறு இயல் துறையின் இயக்குனர் சுதா சேஷய்யனுக்கு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியது. எனவே நேற்று காலை அவர் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

 
அப்போது, மருத்துவமனையிலிருந்து உங்களுக்கு எப்போது அழைப்பு வந்தது? எம்பார்மிங் செய்யப்பட்ட போது ஜெ.வின் உடலில் கால்கள் இருந்தனவா? எவ்வளவு நேரம் எம்பார்மிங் செய்தீர்கள்?  என பல்வேறு கேள்விகளை ஆறுமுகச்சாமி எழுப்பியதாகவும், சுதா அதற்கு பதிலளித்தார் எனவும் கூறப்படுகிறது.
 
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் “கடந்த வரும் டிசம்பர் 5ம் தேதி இரவு 10.30 மணியளவில், ஜெ. இறந்துவிட்டதாக எனக்கு  மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது. மேலும், நான் எம்பார்மிங் செய்ய வர வேண்டும் என கேட்டனர்.  எனது தலைமையிலான மருத்துவக்குழு சுமார் 20 நிமிடங்களில் ஜெ.விற்கு எம்பாமிங் செய்தோம். ஆனால், அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்த போது ஒரு நாளும் நான் அவரை சந்திக்கவில்லை” என சுதா சேஷய்யன் கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments