Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

Advertiesment
sathuragiri

Siva

, திங்கள், 7 ஏப்ரல் 2025 (15:22 IST)
மேற்கு தொடர்ச்சி மலையில், வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில். இந்த புனித ஸ்தலத்தில், அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்கள் உள்பட மாதத்திற்கு எட்டு நாட்கள் பொதுமக்கள் சாமி தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
 
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, இந்த கோவிலுக்கு பக்தர்கள் தினமும் வரலாம் என்ற தீர்ப்பை, குறிப்பிட்ட நிபந்தனைகள் கீழ் கடந்த மாதம் 2ம் தேதி வழங்கியது.
 
ஆனால்,  வானிலை காரணமாக, பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து பெய்த மழையால் நிலச்சரிவு மற்றும் பாதைகள் பிசுபிசுப்பாக மாறியதால், பாதுகாப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
 
இந்தநிலையில், நேற்று முன்தினம் சில பக்தர்களுக்கு மலையேறும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது.
 
இந்நேரத்தில், வத்திராயிருப்பில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, மலையடிவாரத்தில் உள்ள ஓடைகளில் வெள்ளப்போக்கு அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, வனத்துறை இன்று  கோவிலுக்குச் செல்லும் அனுமதியை மறுத்தது.
 
இதனால், தாணிப்பாறை வனத்துறை நுழைவாயிலில் காத்திருந்த பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் வீட்டுத் திரும்ப வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர்.
    
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?