Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வருடன் விமானத்தில் செல்ல மறுத்தாரா? ஆளுனரின் மதுரை பயணம் திடீர் ரத்து..!

Mahendran
சனி, 9 நவம்பர் 2024 (11:17 IST)
முதல்வர் மற்றும் ஆளுநர் ஒரே விமானத்தில் சென்னையிலிருந்து மதுரை செல்ல இருந்த நிலையில் திடீரென ஆளுநர் தனது மதுரை பயணத்தை ரத்து செய்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்ன்.என் ரவி மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் இன்று நடைபெற இருந்த சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதே விமானத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினும் மதுரைக்கு பயணம் செய்ய இருந்ததார். இந்த நிலையில் ஆளுநரின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் இன்று ஆளுநர் ஆர். என். ரவி பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆளுநர் ரவி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது மற்றும் அவர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஆளுநர் மாளிகை விரைவில் விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments