Publish Date: Fri, 08 Nov 2024 (10:35 IST)
Updated Date: Fri, 08 Nov 2024 (10:36 IST)
நேற்று தங்கம் விலை மிக அதிகமாக சரிந்த நிலையில் இன்று சற்று உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7,285 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 680 உயர்ந்து ரூபாய் 58,280 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,790 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,320 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 103.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 103,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது