தேசத்துரோக வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
திமுக கூட்டணி சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் மீதான தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனையும் ரூ.10ஆயிரம் தண்டனையும் மதிமுக விதிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒருமாதம் வரை நிறுத்தப்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்தன.
ஒருவேளை அப்படி எதுவும் நடந்தால் அதற்குத் தயாராக திமுகவின் சட்ட ஆலோசகரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, திமுக சார்பாக வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். இது மதிமுக தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என சில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. மேலும் வைகோ தனது மகனைக் கட்சியில் முன்னிறுத்தப் பார்ப்பதாகவும் அதற்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் பலமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் வைகோவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கட்சிக்குள் எழுந்த சலசலப்புகள் தீர்ந்துள்ளன.
இவை ஒருபுறம் இருக்க தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்துள்ளார். அதில் ‘எனக்கு எதிராக நீதிமன்றம் சட்டத்தின் படி வழங்கப்படவில்லை. சிறப்பு நீதிமன்றம் தனக்கு தெரிந்த விஷயங்களை மட்டும் வைத்து வழங்கியுள்ளது. எனவே அந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.