ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் தேடி நீதிமன்றங்களில் அலைந்து வருகிறார். தற்போது சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில் எப்பொழுது வேண்டுமானாலும் அமலாக்கத் துறையினர் அவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜ்ய சபா எம்பியும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணியன் சாமி 'சிதம்பரத்தின் மீது ஏழுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் இனி காங்கிரஸ் கட்சி தனது செயற்குழு கூட்டத்தை திகார் சிறையில் வைத்துக் கொள்ளலாம் என்றும் கிண்டலாக கூறியுள்ளார். மேலும் நமது கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம் என்றும் இல்லாவிட்டால் பெரிய அளவில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும் என்றும் அவர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சுப்ரமணிய சுவாமியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது