Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்தியும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. கந்தசஷ்டி விவகாரம் குறித்து சுப.வீரபாண்டியன்

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2020 (17:40 IST)
முகக் கவசம் பற்றிப் பேச வேண்டிய நேரத்தில், வேறு கவசம் பற்றியே பேசுவது ஏன்? பக்தியும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. தேர்தல் நெருங்குவதால், திமுக வின் மீது அவதூறு பரப்புவது மட்டுமே நோக்கம். 
 
முருகனின் கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் அவமதிப்பு செய்தது குறித்த தகவல்கள் அவ்வப்போது பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளிடம் இருந்தும் திரையுலக பிரபலங்களிடம் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வந்தாலும் திமுக தரப்பில் இருந்து மிகவும் தாமதமாகவே கண்டனம் வந்தது. அதுவும் திமுக தலைவர் முகஸ்டாலின் அவர்களோ அல்லது உதயநிதி ஸ்டாலின் அவர்களோ கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதும் அக் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி மட்டுமே கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் திமுக ஆதரவாளரான சுப வீரபாண்டியன் உள்பட ஒரு சிலரும் கருப்பர் கூட்டத்திற்கு திமுகவுக்கும் என்ன சம்பந்தம் இல்லை என்று பேட்டி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுப வீரபாண்டியன் தனது டுவிட்டரில் இந்த விவகாரம் குறித்து ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
முகக் கவசம் பற்றிப் பேச வேண்டிய நேரத்தில், வேறு கவசம் பற்றியே பேசுவது ஏன்? பக்தியும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. தேர்தல் நெருங்குவதால், திமுகவின் மீது அவதூறு பரப்புவது மட்டுமே நோக்கம். என்று கூறியுள்ளார். இவருடைய இந்த பதிவுக்கு பல்வேறு விதமான கமெண்ட்டுக்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடித்து துவைக்கும் வெயில்.. இனி மதியம் வரை மட்டுமே வேலை! - ஒடிசா அரசு அறிவிப்பு!

1 லட்ச ரூபாய் பில்லா? நீங்க கரண்ட் பில் கட்டாம இருந்துட்டு..!? - கங்கனாவை வறுத்தெடுத்த மின்வாரியம்!

அடுத்த பாஜக தமிழக தலைவர் யார்? கூட்டணி யாருடன்? விடிய விடிய ஆலோசனை செய்த அமித்ஷா..!

ஹால் டிக்கெட்டை கவ்வி சென்ற பருந்து.. அரசு வேலை தேர்வு எழுத வந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

அரசு வேலை, ரூ.4 கோடி ரொக்கம், சொந்த வீடு.. வினேஷ் போகத் தேர்வு செய்தது எதை?

அடுத்த கட்டுரையில்
Show comments