உலக நீதி நாளை முன்னிட்டு தனியார் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மனிதர்களுக்கு எதிரான குற்றங்கள் இழைப்போர் அதற்கான தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக அயல்நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது.இந்த நிலைக்கு எதிராக ரோமானிய நாட்டில் இதே நாளில் ஒரு குற்றவாளி மீது கிரிமினல் சட்டத்தை அமுல்படுத்திய நாள்.
இந்த சட்டத்தை உலக நாடுகள் அனைத்தும் கடை பிடிக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச நீதிமன்றம் உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டது இதன் அடிப்படையில் உலகம் முழுவதும் உலக நீதி நாள் கொண்டாடப்படுகிறது.
இதனடிப்படையில் இன்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச தீர்வு மையத்தில் இருந்து தனியார் கல்லூரி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் பங்கேற்ற மாணவிகள் இயற்கை வளத்தை காக்கவும்,மனித உரிமைகளை நிலைநாட்டவும்,குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிக்க வலியுருத்தியும் நகரின் முக்கிய விதிகள் வழியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் கோபிநாத் மகிளா விரைவு நீதிமன்ற அமர்வு நீதிபதி சசிகலா மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.