கல்லூரி மாணவர்கள் அனைவரும் குடிகாரர்கள் என்பது போல் நடிகர் ஆர்யா தெரிவித்துள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு தடை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்ட போது, ஜல்லிக்கட்டு என்றால் என்ன? என கேள்வி எழுப்பி பலரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டார். அதன் பின், தெரிந்து கொள்ளதான் அப்படி கேட்டேன் எனக் கூறி சமாளித்தார்.
தற்போது, ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்த போது, வெளிநாட்டு குளிபானங்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், வருகிற மார்ச் 1ம் தேதி முதல், கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை தமிழகத்தில் விற்பனை செய்யமாட்டோம் என தமிழ்நாடு வணிகர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
அதேபோல், கோவை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி, தங்கள் கல்லூரியில் இனிமேல் பழச்சாறுகளை மட்டுமே விற்பனை செய்வோம் என அறிவித்தது. அதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் ஆர்யா “அதேபோல், அவர்கள் இனிமேல் வெளிநாட்டு மதுபானங்களுக்கு பதிலாக பழச்சாறு அருந்துவார்கள்” என கூறி கிண்டலடித்துள்ளார்.
மாணவர்கள் என்றாலே குடிகாரர்கள் என்பது போல் அவர் தெரிவித்துள்ள இந்த கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.