சுப்ரமணியன் சுவாமி தமிழ்நாட்டுக்கு வரனுமா?: அதை யார் முடிவு பண்ணனும் தெரியுமா?
சுப்ரமணியன் சுவாமி தமிழ்நாட்டுக்கு வரனுமா?: அதை யார் முடிவு பண்ணனும் தெரியுமா?
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராடியவர்களை பொறுக்கிகள் என கூறி வந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தற்போது ஒட்டுமொத்தமாக தமிழர்களை பொறுக்கிகள் என கூறி வருகிறார்.
இதனையடுத்து சுப்பிரமணியன் சுவாமி மீது கடும் கோபத்தில் உள்ளனர் தமிழக மக்கள். ஆனாலும் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து பொறுக்கிகள் என கூறி தமிழர்களை சீண்டும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்நிலையில் அவரது டுவிட்டர் பதிவில் பலரும் நீ தமிழ் நாட்டுக்கு வந்து பாரு என கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை போலீஸ் தடியடி நடத்தி கலைத்ததையடுத்து சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், என்னை மெரினாவுக்கு வருமாறு பொறுக்கிகள் அச்சுறுத்தினார்கள். ஆனால் சிவ பெருமான் போலீசை அனுப்பியுள்ளார், அதனால் பொறுக்கிகள் ஐயோ ஐயோ என அலறியடித்து ஓடி விட்டனர். தற்போது பொறுக்கிகள் தன்னை தமிழ்நாட்டுக்கு வருமாறு அழைக்கின்றனர். அதை சிவன் முடிவு செய்யட்டும் என கூறியுள்ளார்.