Publish Date: Sat, 09 Apr 2022 (07:50 IST)
Updated Date: Sat, 09 Apr 2022 (07:49 IST)
மாநகராட்சி பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் சேர்க்கை உயர்ந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
நடப்பு கல்வி ஆண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கூடுதலாக 25 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது
கடந்த ஆண்டு 90,000 என இருந்த சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை தற்போது 1.15 லட்சமாக அதிகரிப்பதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது
தனியார் பள்ளிகளில் இருந்து மாநகராட்சி பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.