தனியார் பள்ளிகள் அரசு இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு ஆண்டுதோறும் இதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் 2022-23ம் ஆண்டிற்கான தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, www.rtetnschools.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக இலவச மாணவர் சேர்க்கைகான விண்ணப்பத்தை ஏப்ரல் 20ம் தேதி முதல் மே 18ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.