Publish Date: Tue, 21 Dec 2021 (10:14 IST)
Updated Date: Tue, 21 Dec 2021 (10:22 IST)
மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த இரு சிறுமிகள் தங்களை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுப்பதாக புகார் அளித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் காண்டை கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மற்றும் முருகேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டு பள்ளிக்கு செல்லும் மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் வீட்டின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் அந்த இரு மாணவிகளையும் தகாத வார்த்தையால் பேசி அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார். மேலும் அவர் தாக்கியதில் முனியாண்டியின் இளைய மகளுக்கு கையில் வெட்டுக்காயமும் ஏற்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக அளிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செல்வம் இப்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் தங்கள் மகள்கள் பள்ளிக்கு செல்லும் போது செல்வம் மற்றும் அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டுவதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தோடு சென்று புகார் அளித்துள்ளனர் முனியாண்டி குடும்பத்தினர்.