Publish Date: Sat, 23 Jul 2022 (12:46 IST)
Updated Date: Sat, 23 Jul 2022 (12:50 IST)
மாணவி ஸ்ரீமதி உடல் நல்லடக்கம்: உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி!
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பள்ளியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஸ்ரீமதி உடல் நல்லடக்கம் செய்யப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன
கள்ளக்குறிச்சி அருகே பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதி என்ற மாணவி திடீர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்காக நீதி கேட்டு நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது
இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஸ்ரீமதி உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதித்ததை அடுத்து இன்று காலை பெற்றோரிடம் ஸ்ரீமதி உடல் வழங்கப்பட்டது
இதனை அடுத்து ஸ்ரீமதியின் உடலுக்கு சடங்குகள் செய்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஸ்ரீமதி உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் ஸ்ரீமதி உடலுக்கு அந்த பகுதி மக்கள் அனைவரும் அஞ்சலி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது