Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவி பாலியல் விவகாரம் எதிரொலி: அண்ணா பல்கலை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்..!

Siva
ஞாயிறு, 5 ஜனவரி 2025 (13:16 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நேர்ந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம், மாணவ, மாணவிகள்  பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பணியாளர்களை மட்டுமே வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.

* பல்கலைக்கழக வளாகத்தில் வெளிநபர்கள் நடைபயிற்சி செய்ய தடை.

* மாலை, இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலர்கள் ரோந்து செல்ல வேண்டும்.

* வளாகத்தில் வெளிநபர்கள் வாகனங்களை நிறுத்த தடை. அவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

*  கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை நேரத்திற்கு பிறகு பல்கலைக்கழக வளாகத்தில் தங்கக்கூடாது.

* பல்கலைக்கழக வளாகத்தில் சிசிவிடி கேமரா, மின்விளக்குகள் சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

* பல்கலைக்கழக வளாகத்தில் வெளிநபர்கள் வாகனம் கண்டறியப்பட்டால் போலீசில் புகார் அளிக்க வேண்டும்.

* பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடி மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிய வேண்டும்.",
   

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை எம்பி வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

நாளை கூடுகிறது சட்டசபை கூட்டம்.. கவர்னர் உரையாற்றுகிறார்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் என்கவுண்டர்: 4 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு அதிகாரி பலி..!

சீனாவில் வேகமாக பரவும் வைரஸ்.. கேரளாவில் தீவிர கண்காணிப்பு..!

முதல்வரை சீண்டி பார்ப்பதா? பாலகிருஷ்ணனுக்கு திமுக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்