ஆசிரியருக்கு ஆபாச மெஸ்ஸேஜ் அனுப்பிய மாணவன்!
ஆசிரியருக்கு ஆபாச மெஸ்ஸேஜ் அனுப்பிய மாணவன்!
மும்பையில் மாணவன் ஒருவன் தனது ஆசிரியை ஒருவருக்கு ஃபேஸ்புக்கில் ஆபாசமாக மெஸ்ஸேஜ் அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. அந்த மாணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை பன்ச்கானி பகுதியில் பள்ளி ஒன்றில் சித்ரா என்ற ஆசிரியை ஒருவர் ஓர் ஆண்டுக்கு முன்னர் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் தற்போது அந்த பள்ளியில் வேலை பார்ப்பதை நிறுத்திவிட்டார்.
இந்நிலையில் அவரை அவரிடம் படித்த 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆசிரியையும் தனது மாணவன் தானே என்று நினைத்து அவரிடம் பேசியுள்ளார்.
இந்நிலையில் அந்த மாணவன் ஆசிரியைக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியை அவனை கண்டித்துள்ளார். ஆனாலும் அந்த மாணவன் நிறுத்தாமல் ஆபாசமாக பேசி வந்துள்ளான்.
இதனால் கோபமடைந்த ஆசிரியை மாணவன் மீது காவல் துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.