பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளியில் மாணவிகளின் ஆடைகளை களைந்து நாப்கின் அணிந்தது யார்? என்பதை கண்டுபிடிக்க முயன்ற இரண்டு ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஃபாசில்கா மாவடத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கழிவறை செல்லும்போது நாப்கின் ஒன்று இருந்ததை பார்த்துள்ளார். உடனே ஆத்திரம் அடைந்த அவர் மாணவிகளிடம் வந்து கழிவறையில் நாப்கினை போட்டது யார்? என்று கேட்டுள்ளார். ஆனால் ஆசிரியரின் கோபத்திற்கு பயந்த மாணவிகள் அமைதியாக இருந்தனர்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் உடனே சக ஆசிரியர் ஒருவருடன் இணைந்து நாப்கின் அணிந்த மாணவி யார்? என்பதை கண்டுபிடிக்க அனைத்து மாணவிகளின் ஆடையை களைந்து சோதனை செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அழுது கொண்டே வகுப்பை விட்டு வெளியேறி வீட்டுகு சென்று தங்கள் பெற்றோர்களிடம் கூறினர்.
இதனையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விஷயம் பஞ்சாப் முதல்வரின் கவனத்திற்கு சென்றபோது உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வர், இரண்டு ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்ததோடு அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.