Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் ஆக முடியுமா? கே.பி.முனுசாமி விளக்கம்

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (20:12 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும், சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் முதல்வர் பதவியையும் சசிகலா அடைய நினைத்ததால் அதிமுக இரண்டாக உடைந்தது. அதன் பின்னர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றவுடன் அவரது குடும்பத்தினர் அனைவருமே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி பொதுச்செயலாளர் என்ற பதவியே காணாமல் போனது

இந்த நிலையில் மீண்டும் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி வரப்போவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். விரைவில் அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை முடிவடையவுள்ளதாகவும், உறுப்பினர் சேர்க்கை முடிந்தவுடன் அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்றும்,  உட்கட்சி தேர்தல் முடிந்தபிறகு அதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

மேலும் அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுவிட்டதாகவும், அவரது உறுப்பினர் சேர்க்கை கூட புதுப்பிக்கவில்லை என்றும், அதனால் சசிகலா மீண்டும் அதிமுகவின் பொதுச்செயலாளராக வாய்ப்பு இல்லை என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்ட முடியாத கடன்.. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் திவாலானது!

இனி ஆங்கிலம் மட்டும்தான் அமெரிக்காவின் மொழி! - ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

என் மகள் சாவுக்கு காங்கிரஸ் தான் காரணம்.. சூட்கேஸில் பிணமாக இருந்த பெண்ணின் தாய் பேட்டி..!

கச்சத்தீவு விவகாரம்.. தமிழக அரசு மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு..!

அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்பா? பிரேமல்தா விஜயகாந்த் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments