கதிர் அடிக்கும் இயந்திரத்தில் சிக்கி மாணவி பலி

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 11 January 2025
webdunia

கதிர் அடிக்கும் இயந்திரத்தில் சிக்கி மாணவி பலி

Advertiesment
கதிர் அடிக்கும் இயந்திரத்தில் சிக்கி  மாணவி பலி
, புதன், 17 மே 2023 (17:06 IST)
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்துள்ள வேப்பிலைப்பட்டியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்கதிர்கள் அறுவைக்கு தயாராகி வரும் நிலையில், கதிர் அடிக்கும் மெஷின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மாணவி அதில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்துள்ள கேத்திரெட்டிப்பட்டி ஊராட்சி  வேப்பிலைப்பட்டியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்கதிர்கள் அறுவைக்கு தற்போது அறுவடைக்குத் தயாராகி வருகிறது.

இதனால், அப்பகுதியில் கதிர் அடிக்கும் இந்திரம்  ஒன்று  நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேத்திரப்பட்டி அடுத்துள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி. இவரது மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில்  8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், சிறுமி, தன் மாமா சக்திவேல் தோட்டத்தில் ராகி கதிர் அடிக்கும் மெஷின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கதிர் அடிக்கும் இயந்திரத்தின் ஒரு பாகம் பள்ளி மாணவியின் தலையில் தாக்கியது. இதில், படுகாயமடைந்த சிறுமிக்கு அதிக ரத்தம் வெளியேறி  சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார்.உறவினர்கள் அவரை  பார்த்த போது, சிறுமி சடலமாகக் கிடந்துள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஈற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுவானில் குலுங்கிய விமானம்…பயணிகள் காயம்