பிளஸ் 2 பொதுத்தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. அதேபோல், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆவடி, கோவர்த்தனகிரி பகுதியில் வசிப்பவர் கனகராஜ். இவர் மகன் தேவா( 17 வயது). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை சரியாக எழுதவில்லை என்று பெற்றோரிடம் கூறியுள்ளார்.
மாணவருக்குப் பெற்றோர் ஆறுதல் கூறி வந்த நிலையில், இன்று தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இதில், தேவா தமிழ் மற்றும் கம்யூட்டர் பாடத்தில் தோல்வியடைந்திருந்தார். மதிப்பெண்ணும் குறைவாக இருந்ததால், தேவா வேதனையடைந்தாதாக தெரிகிறது.
அடுத்த தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் என்று தேவாவிடம் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால், வீட்டில் தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.