Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்: அதிர்ச்சி காரணம்!

Advertiesment
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்: அதிர்ச்சி காரணம்!
, புதன், 16 பிப்ரவரி 2022 (19:12 IST)
சிவகங்கையில் மாணவர் ஒருவர் ஆசிரியரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அமராவதி புதூர் என்ற பகுதியில் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ஜாய்சன் என்ற மாணவர் படித்து வந்தார். இவர் வகுப்பறையில் செல்போன் கொண்டு வந்து அதை பயன்படுத்துவதிலேயே குறியாக இருந்தார் என்பதும் பாடங்களை கவனிப்பது இல்லை என்றும் கூறப்பட்டது
 
இதனை அடுத்து ஓவிய ஆசிரியராக ராஜ் ஆனந்த் என்பவர் அந்த மாணவனின் செல்போனை பிடுங்கி முதல்வரிடம் ஒப்படைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் ஜாய்சன் வகுப்பு முடிந்த பின்னர் கத்தியை எடுத்து ஆசிரியர் ராஜ் ஆனந்த் உடலில் சரமாரியாக குத்தினார்
 
இதனால் ஐந்து இடங்களில் காயம் பட்ட ஆசிரியர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர். இந்த நிலையில் மாணவன் ஜாய்சனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி ஜெயித்து கவுன்சிலர் ஆகப்போகிறாரா? கமல்ஹாசன் கேள்வி!