Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்திரப்பதிவில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை! – அமைச்சர் எச்சரிக்கை!

Moorthi minister
, சனி, 30 செப்டம்பர் 2023 (13:56 IST)
பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் விதமாக மற்றும் முறைகேடான சொத்துப் பதிவில் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் பத்திர பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி


 
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பை பட்டியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடைகளுக்கு கானைநோய் தடுப்பூசி முகாம் மற்றும் வயிற்றில் இருக்கும் கரு குறித்து அறிவதற்கான ஸ்கேன் உள்ளிட்டவை செய்யும் நிகழ்வினை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார் , தமிழக கால்நடைத்துறை மற்றும் ஆவின் நிர்வாகம் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் தும்பை பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாடுகள் கோழிகள் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டு மாடுகளுக்கு கானை தடுப்பூசி போடப்பட்டது. மேலும் சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசுகளும் மாடுகளுக்கான தீவன புல் விதைகளும் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் பத்திர பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் தாங்கள் வளர்க்கக்கூடிய கால்நடைகளுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவின்போது பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பத்திரப்பதிவு துறையில் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் விதமாக மற்றும் முறைகேட்டில் ஈடுபடும் பதிவுத்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பத்திரப்பதிவு மற்றும் பணிகள் துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவிரி நதிநீர் பிரச்சினை; மதுரையில் நாம் தமிழர் கட்சி போராட்டம்!