நேற்று பல தெருக்களுக்கு புதிய பெயர்களை மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில் பெயர் மாற்றத்திற்கு தெரு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பல முக்கிய சாலைகள், தெருக்களின் பெயர் சமீபமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் நேற்று சென்னையில் உள்ள 5வது ட்ரஸ்ட் க்ராஸ் தெருவிற்கு, பிரபல இயக்குனர், நடிகர் எஸ்.வி.சேகரின் தந்தை எஸ்.வி.வெங்கட்ராமன் பெயரில் வெங்கட்ராமன் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த புதிய பெயர் பலகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஆனால் இதற்கு அந்த தெருவை சேர்ந்த மக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக மக்கள் தங்கள் வீட்டு வாசல்களிலும், கேட்களிலும் ”Don't break the Trust. Stop renaming 5th Trust Cross Street” என்ற கண்டன பேனரை தொங்க விட்டிருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K