கடைக்கு முன்பு நின்ற டூவீலர் வாகனத்தை திருடிய இளைஞர் !

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (16:41 IST)
திருப்பூர் மாவட்டத்தில் சாலையோரமாக கடைக்கு முன் நிறுத்திய இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞனை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் குமரன்  ரோட்டில் ஜெராக்ஸ் கடையை நடத்தி வருபவர் மணிமாறன். இவர் எப்பவும் தனது கடைக்கு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம்.
 
இந்நிலையில் இன்று வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தை ஜெராக்ஸ் கடைக்கு முன்பு நிறுத்தி சாவியை அதிலேயே வைத்துவிட்டு கடைக்குள் சென்றுள்ளார்.
 
பின்னர் அந்தவழியே வந்த இளைஞன் ஒருவர், இருசக்கர வாகனத்துடன் சாவி இருப்பதை பார்த்து அதை திருடிச் சென்றுவிட்டான்.
 
இந்தக் காட்சிகள் எல்லாம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. பின்னர் தனது வண்டியை காணவில்லை என பதறிய மணிமாறன் போலீசாரிடம் புகார் அளித்தார். வாகனத்தை திருடிய இளைஞனை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை அதிகம்.. உயிரை மாய்த்துக் கொண்ட பி.எல்.ஓ.. பெரும் அதிர்ச்சி..!

அறிவு இருக்கிறவன் அறிவு திருவிழா நடத்துகிறான்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!

இன்று கார்த்திகை 1ஆம் தேதி.. சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை! நவம்பர் 23 வரை கனமழை பெய்யும்..!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments