ஆசிரியர் அடித்ததால் இறந்து போன சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (16:11 IST)
ஆசிரியர் அடித்ததால் 9 வயது சிறுவன் இறந்து போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சுந்திரா புட்டு பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் மோகன கிருஷ்ணன், மண்டல் பரிஷத் தொடக்கப்பள்ளியில் படித்து வந்தான். இந்நிலையில் கடந்த வாரம் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மோகன் கிருஷ்ணனை அடித்துள்ளார்.

இதனால் அந்த சிறுவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதன் பிறகு சிறுவனை அவனது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒரு வாரம் கடந்த பிறகு அந்த சிறுவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தான்.

இது குறித்து சிறுவனின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் அந்த ஆசிரியரின் மீது முதல் கட்டமாக எந்த நடவடிக்கையும் எடுக்க கல்வி அதிகாரி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு.. எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக முடிவு..!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிப்பேன்.. ட்ரம்ப் மிரட்டல்..!

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments