Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டெர்லைட் வழக்கு: நாளை தீர்ப்பு என்பதால் பரபரப்பு

Advertiesment
ஸ்டெர்லைட் வழக்கு: நாளை தீர்ப்பு என்பதால் பரபரப்பு
, திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (20:46 IST)
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிராக ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில வருடங்களாக நடைபெற்று முடிவடைந்து நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நடந்த கலவரத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, 2018 மே மாதம் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம் , பவானி அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடற்படை வீரரின் உயிரைக் காப்பாற்றிய செல்ல நாய்…