குறி சொல்லும் பேரில் திருட்டு : இளைஞரை வளைத்து பிடித்த போலீஸ்

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (20:24 IST)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தக தோட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் மல்லிகா என்ற பெண் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அவ்வழியே சென்ற தினேஷ் மல்லிகாவிடம் குறி  சொல்வதாக கூறியுள்ளார். ஏற்கனவே தினேஷ் மல்லிகாவிடம் பலமுறை குறி சொல்லியுள்ளதால் அதே நம்பிக்கையில் தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். 
 
ஆனால் மல்லிகா சிறிது வெளியே சென்ற போது, அந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார் தினேஷ். அப்போது வீட்டில் இருந்த பணம் ரூ.10 லட்சம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு ஓடிவிட்டார்.
 
இந்நிலையில் மல்லிகா அங்குள்ள காவல் நிலையத்தில், தினேஷ் மீது புகார் அளித்தார்.  இவ்வழக்கை பதிவு செய்த  போலீஸார் தினேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தினேஷ் தன் குற்றத்தை ஒப்புகொண்டார். இதனையடுத்து அவரிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்தனர். பின் தினேஷை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் தலைகீழாக குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ஒரு லட்சத்திற்கும் கீழ்..!

புத்தாண்டில் அதிக போதையா? தகவல் கொடுத்தால் வீட்டுக்கு அழைத்து செல்வோம்: காவல்துறை அறிவிப்பு..!

தெரு குழாயில் தண்ணீர் குடித்த 8 பேர் பலி.. 100 பேர் மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?

கரூர் விவகாரம்.. சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன? நிர்மல்குமார் பேட்டி..!

உபெர் உதவியால் பிறந்த குழந்தைக்கு 10 வயது.. இணை நிறுவனர் டிராவிஸ் கலானிக் நெகிழ்ச்சி பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments