Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு போக்குவரத்து கழகம் - நுகர்வோர் அமைப்புகளுடன் கலந்தாய்வு கூட்டம்

Palladam manikuma
, சனி, 10 டிசம்பர் 2022 (22:14 IST)
அரசு போக்குவரத்து கழகம் - நுகர்வோர் அமைப்புகளுடன் கலந்தாய்வு கூட்டம்  இன்று நடத்தப்பட்டது.
 
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் TNSTC  திருப்பூர் மண்டலம் சார்பில் நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு கலந்தாய்வு குறை தீர்ப்பு கூட்டம் 09.12.2022 வெள்ளி அன்று திருப்பூர் காங்கயம் ரோடு CTC அலுவலகத்தில் மண்டல  பொது மேலாளர் AM.மாரியப்பன் தலைமையில் துணை  மேலாளர் யுவராஜ், ராஜேந்திரன் (வணிகம்)முன்னிலையில்  நடைபெற்றது. 
 
கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் பல்லடம் தாலுக்கா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத் தலைவர் மணிக்குமார்,  பொருளாளர் நாகராசன், கன்ஸ்யூமர் கேர் அசோசியேசன் தலைவர் காதர்பாட்க்ஷா , ஹானஸ்ட் கன்ஸ்யூமர் புரடக்ஷன்ஸ் சென்டர் தலைவர் ஹரிகரன், நல்லூர் நுகர்வோர் மன்றத் தலைவர் சண்முகசுந்தரம். கன்ஸ்யூமர் வாய்ஸ் பொது செயலாளர் செளந்தரராஜ் கன்ஸ்யூமர் புரடக்க்ஷன் தலைவர் லியாகத்அலி, கன்ஸ்யூமர் விங்க் கிருஷ்ணசாமி, CD நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் திருப்பூர் மையம் ஒருங்கிணைப்பாளர் சவுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பஸ் போக்குவரத்து குறைகள் ,பயணிகள் நலன் காக்கும் பல்வேறு கேளிக்கைகள் வைத்து பேசினர்.
 
மேற்படி கூட்டத்தில் பல்லடம் தாலுக்கா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்
 
* பெரும்பாலும் அரசு பஸ்கள் சுத்தப்படுத்தப்படாமல் குப்பையோடு ஜன்னல் கண்ணாடிகள் அழுக்கு படிந்து கீரல் விழுந்து நீக்கி சாத்த முடியாத அளவுக்கு சீர் கேட்டுடன் கிழிந்த இருக்கைகளுடன் சரியான பராமரிப்பு இன்றி  இயக்கப்படுகின்றன, இதனால் பயணிகளுக்கு மன உளைச்சல் உடல் வேதனை ஏற்படுவதாக புகார்கள் எழுகிறது ,எனவே மக்கள் சொத்தான அரசு பேருந்துகளை நன்கு பராமரித்து தூய்மை படுத்தி பயணிகளுக்கான த்க்க பாதுகாப்புகளுடன் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
* மூன்று வருடங்களுக்கு முன்பு கடந்த ஆட்சியில் தமிழக அரசால் பலநூறு கோடியில் ஆயிரக்கணக்கான புதிய பஸ்கள் வழங்கப்பட்டு அதில் கோவை திருப்பூர் மண்டலங்களுக்கு நூற்றுக்கணக்கான பஸ்கள் வழங்கப்பட்டு அவைகள் பல்வேறு வழித்தட்களில் இயக்கப்பட்டு வருகிறது அவைகள் வருடக்கணக்கில் தூய்மை  பராமரிப்பு இன்றி பழய பஸ்களை போல் காட்சியளிக்கிறது,  இதில் போக்குவரத்து ஊழியர்கள்,  அதிகாரிகளின் அலட்சியம் மேலோங்கி வருகிறது இது பயணிகளை முகம் சுழிக்க வைக்கிறது ,எனவே மக்கள் வரிப்பணத்தில் வங்ங்கப்பட்ட  மக்கள் சொத்தான மேற்படி பஸ்களை வாட்டர் சர்வீஸ் செய்து  தினந்தோரும் தூய்மை படுத்தி  புதிய பஸ்களை போல் தனியார் பஸ்களுக்கு நிகராக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
*பொதுவாக  பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல் கோவயிலிருந்து வரும் பஸ்கள்  பல்லடம் பஸ்நிலையத்திற்குள் செல்லாமல்  பஸ்நிலையம் முன் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கிறது, இதனால் சாலையில்  போக்குவரத்து நெருக்கடி,  விபத்துகள் ஏற்படுகிறது பயணிகள் பாதுகாப்பு இன்றி சிரமப்படுகின்றனர் எனவே  அனைத்து பேருந்துகளும் இரவு நேரத்தில்  பல்லடம் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
* சில அரசு, தனியார் பேருந்து ஒட்டுநர்கள போட்டி போட்டுக் கொண்டு சாலையில் உள்ள மேடுபள்ளங்களை  கவனிக்காமல்  அதி வேகமாக முரட்டுத்தணமாக பஸ்களை இயக்கி பயணிகளுக்கும்  ரோட்டில் செய்பவர்களுக்கும் அச்சுறுத்தல், விபத்தை ஏற்படுத்தி வருகிறார்கள், எனவே போக்குவரத்து அதிகாரிகள் ஒட்டுநர் நடத்துனர்களுக்கு மோட்டார் வாகண சட்ட விதிகளை எடுத்துரைத்து தக்க பயிற்சியும் அறிவுரையும் வழங்க வேண்டும். 
 
*  திருப்பூர் மாவட்டம் பல்லடம் -தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வே.  கள்ளிப்பாளயம் ஊராட்சி மக்களின் பஸ்  போக்குவரத்து சிரமம் தவிர்க்க கடந்த ஆட்சிகாலத்தில் ,  கோவயிலிருந்து மதுரை செல்லும் பேருந்துகளும், மதுரையிலிருந்து கோவை வரும் பேருந்துகளும்  கள்ளிபாளையத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என ஸ்டேஜ் போட்டு போக்குவரத்து கழகங்களுக்கு அரசு உத்தரவு பிரப்பிக்கப்பட்டு மதுரை கோவை பஸ்கள் அங்கு நிறுத்தி  ஆட்களை ஏற்றி இறக்கி சென்று கொண்டிருந்தது , சமீப கலமாக  ஒட்டுநர் நடத்துனரால் இந்த  நடைமுறை உத்தரவு சரியாக பின்பற்றப்படுவதில்லை சில பஸ்கள் மேற்படி ஸ்டேஜில் கை காட்டினாலும் நிற்பதில்லை , பல்லடத்தில் மேற்படி ஸ்டேஜில் மதுரை பஸ் நிற்காது என்று கூறி சில நடத்துணர்கள் பயணிகளை ஏற்றிச் செய்வதில்லை இதனால் மக்கள் காலவிரயம், மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.  எனவே மேற்படி கள்ளிப்பாளையத்தில் மதுரை கோவை மார்கமாக சென்றுவரும் அனைத்து பேருந்துகளும் அரசு உத்தரவின்படி நின்று செல்ல  ஒட்டுநர் நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்து வலியுறுத்தப்பட்டன;;  என்று பல்லடம் தாலுக்கா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் கேவிஎஸ் மணிக்குமார் தெரிவித்துள்ளார்.
 
  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உப்பு அதிகமானதால் சமையல்காரர் படுகொலை!