சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உறுதியாகி வரும் நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் தீவிரமாகியுள்ளன. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் 138 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றும் 2 டாக்டர்கள், 14 பயிற்சி மருத்துவர்கள், 4 செவிலியர்கள் ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.