Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த வெங்கட்பிரபு!

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த வெங்கட்பிரபு!
, வியாழன், 6 ஜனவரி 2022 (09:57 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் தமிழ்- தெலுங்கு படத்தில் வெங்கட்பிரபு திரைக்கதையில் முக்கியப் பங்காற்றியுள்ளாராம்.

புதுமுக இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவான தெலுங்குத் திரைப்படம் 'ஜாதி ரத்னாலு'. நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் அந்த படத்தின் இயக்குனர் மீது கவனம் அதிகமாக விழுந்துள்ளது. இந்நிலையில் அவர் அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் தமிழ்- தெலுங்கு மொழி படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் தொடங்க உள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தில் முக்கிய வேடங்களில் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் இயக்குவதால் தமிழில் தெலுங்கு டப்பிங் படம் போல ஆகிவிடக் கூடாது என்பதால் இப்போது இயக்குனர் வெங்கட்பிரபுவை இந்த படத்தின் திரைக்கதை பணிகளுக்காக ஒப்பந்தம் செய்துள்ளதாம் படக்குழு. இப்போது கதையை மெருகேற்றும் பணியில் வெங்கட்பிரபு ஈடுபட்டு வருகிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

11 லட்சத்தை எடுத்து கொண்டு வெளியேறுகிறாரா அமீர்!