Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனசாட்சியோடு நடந்துக்கோங்க ராஜபக்‌ஷே! - ஸ்டாலின் அட்வைஸ்!

Advertiesment
மனசாட்சியோடு நடந்துக்கோங்க ராஜபக்‌ஷே! - ஸ்டாலின் அட்வைஸ்!
, திங்கள், 18 நவம்பர் 2019 (14:24 IST)
இலங்கையில் மீண்டும் ராஜபக்‌ஷே அதிபராகி உள்ள நிலையில் அவருக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷே அதிக வாக்குகள் வென்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஜபக்‌ஷே காலத்தில் இலங்கையில் ஈழ தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உலகையே உலுக்கிய நிலையில், மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்திருப்பது உலக தமிழர்கள் பலரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கை அதிபராக ராஜபக்‌ஷே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் “ராஜபக்‌ஷே வெற்றி உலக தமிழர்களை அச்சம் கொள்ள செய்திருக்கிறது. அவரது பழைய வரலாறு ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரானது என்பதையும், அதனால் ஏற்பட்ட கோடூரமான விளைவுகளையும் உலகமே அறியும். இனியாவது ராஜபக்‌ஷே சமத்துவத்துடனும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் பிரதமர் மோடி தமிழர்களின் நலனை உறுதிசெய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைய சாத்திட்டு நடைய கட்டனும் போல... தலையில துண்டு போட்ட வோடபோன், ஏர்டெல்?