சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் சக்கரநாற்காலி பற்றி கருத்துக் கூறியது திமுகவினரிடையே கடும் விமர்சனம் தெரிவிக்கபப்ட்டது. இந்நிலையில் இது கலைஞரை நினைத்துக் கூறப்பட்டதல்ல அவர் மீது எனக்குப்பெரும் மரியாதை உண்டு எனக் கூறியான் கமல்ஹாசன்.
இந்நிலையில் இன்று திமுக தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான முக.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் என்பதால அவருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
அதில், விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு முக.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாபது: அன்பு நண்பரின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி! எனத் தெரிவித்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.